நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன மீனவர் மரணமடைந்த நிலையில் மீட்பு

மெர்சிங்: 

டிசம்பர் 22-ஆம் தேதி  சுங்காய் லென்கொர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து, காணாமல் போன 36 வயது ஆண் டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர் அப்துல் முயிஸ் முக்தார், "முஹம்மது ரிஸுரின் முஹம்மது நோ என்பவரின் உடல்  நள்ளிரவு 12:49 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. படகில் அவர் மற்ற இரண்டு ஆண்களுடன் இருந்த போது படகு கவிழ்ந்ததுள்ளது. மரணமடைந்த நபரின் உடல் அடுத்தக்கட்ட விசாரனைக்காக காவல்துறை அதிகாரியிடம் ஒப்படக்கப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த முகாமில் 13 தீயணைப்பு வீரர்கள், 5  மீட்பு குழு உறுப்பினர்கள், 5 போலீசார்,  4 சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்று அப்துல் முயிஸ் குறிப்பிட்டிருந்தார்.

படகில் இருந்த மற்ற இரண்டு பேர் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர் என அவர் கூறினார்.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset