நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்

கிள்ளான்:

கிள்ளானின் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 700 பேர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநில மஇகாவின் தலைமை செயலாளர் எம். சசிதரன் கூறினார்.

இன்று கிள்ளானில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி என் குழந்தைப் பருவ நண்பரான பாஸ்டர் பாவல் போனியின் அயராத உழைப்பிலும் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பாஸ்டர் பாவல் மருத்துவ சிகிச்சைக்காக தவிக்கும் குடும்பங்களுக்கு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு, கல்விக்காக போராடும் மாணவர்களுக்கு, போதைப் பழக்கத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்து வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளில், எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அமைதியாகவும், தொடர்ந்து மனிதநேய சேவையாற்றி வருகிறார்.

பல குடும்பங்களுக்கு அவர் நம்பிக்கையின் ஒளியாகவும், வாழ்க்கையில் புதிய பாதையை காட்டும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

இத்தகைய சேவைகளே கிறிஸ்துமஸ் தரும் உண்மையான செய்தியான அன்பு, கருணை, சேவை என்பவற்றை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்த இனிய நாளில் பாஸ்டர் பாவல் போனியின் சேவைகள் இன்னும் பலரை சென்றடைய
இறைவன் அவருக்கு ஆரோக்கியமும் வலிமையும் அருள வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கிறேன்.

இந்த இனிய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை
சிறப்பாக ஏற்பாடு செய்த பாஸ்டர் பாவல் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று சசிதரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset