நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது:  நஜிப்  வழக்கறிஞர் சாடல்

கோலாலம்பூர்:

நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா இவ்வாறு சாடினார்.

வீட்டுக் காவலில் மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்க நஜிப் ரசாக்கின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இது மாட்சிமை தங்கிய மாமன்னர்,  மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது.

இன்றைய முடிவு மாமன்னர், மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் குறைப்பதாகத் தோன்றும் ஒரு முடிவாகும்.

மலாய் ஆட்சியாளர்கள், மாமன்னரின் அதிகாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இன்றைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மலாய் ஆட்சியாளர்களிடமும், மாமன்னரிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மன்றாடுகிறோம் என்று நஜிப்பின் தற்காப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset