நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகிச்சை வெற்றி; வீடு திரும்பினார் துன் மகாதீர்

கோலாலம்பூர்:

தேசிய இதய மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நேற்று வீடு திரும்பினார்.

அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அம்மையத்தின் நிர்வாகத் தரப்பு தெரிவித்தது.

இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளை துன் மகாதீர் தமது வீட்டிலிருந்தபடியே பின்பற்றுவார் என தேசிய இதய மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

96 வயதான துன் மகாதீர் கடந்த 7ஆம் தேதியன்று தேசிய இதய மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அண்மைய சில வாரங்களில் அவர் இரண்டாவது முறையாக அம்மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறை அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு குறிப்பிட்ட சில உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முறை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நெஞ்சுத் தொற்று காரணமாக இதய மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் துன் மகாதீர். தற்போது 96 வயதாகும் அவருக்கு, கடந்த 2006ஆம் ஆண்டு லேசான மாரடைப்பு ஏற்பட்டது.

கடந்த 1989, 2007ஆம் ஆண்டுகளில் அவர் 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset