செய்திகள் உலகம்
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
பெய்ஜிங்-
கட்டாய உழைப்பு குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்கா சீனா உட்பட 59 நாடுகளுக்கு இறக்குமதி பொருட்கள் மீது புதிய வர்த்தக வரியை விதித்துள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் வர்த்தகப் போரை தூண்ட வேண்டாம் என்று பெய்ஜிங் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள வரி விதிப்புகள் 10 விழுக்காடு முதல் 12.5 விழுக்காடு வரை மாறுபடுகின்றன.
இதில் சீனாவிற்கு மிக அதிகபட்சமான வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு ஒருதலைப்பட்சமான வரி விதிப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். வரிப் போர்களும் வர்த்தகப் போர்களும் எந்தத் தரப்பிற்கும் நன்மையைத் தராது என்று சீனா நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.
நடப்பாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த உலகளாவிய வரி விதிப்பின் காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, இந்த புதிய வரிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
