செய்திகள் கலைகள்
நீட் வினாத்தாள் கசிவு: இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகர் மம்மூட்டி
புதுடெல்லி:
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகர் மம்மூட்டி பதிவிட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற சிஜேபி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிஜேபி இளைஞர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாட்டின் ஏராளமான நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள் எனக் கூறி சிஜேபி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மலையாள நடிகர் மம்மூட்டி இன்று (ஜூலை 23) பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“இளைஞர்களே நம் நாட்டின் உண்மையான செல்வம். அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள். அவர்களைப் பாதுகாத்திடுங்கள். அவர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
