நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி:  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை 

கோலாலம்பூர்: 

தமிழ் திரையுலகில் காதல், காவல் துறை, குற்றவியல் மற்றும் மனித உணர்வுகளை தனித்துவமான காட்சியமைப்புடன் பதிவு செய்த இயக்குநர்களில் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருவர்.

2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

‘மின்னலே’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ மூலம் காவல் துறை பின்னணியிலான ஆக்‌ஷன் கதைகளிலும் தனது முத்திரையைப் பதித்தார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ ஆகிய படங்களும் அவரது இயக்குநர் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்றன.

2008ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ கௌதம் மேனனின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக அமைந்தது. காதல், குடும்ப உறவு, தந்தை–மகன் பாசம் மற்றும் வாழ்க்கைப் பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம் தேசிய விருதையும் பெற்றது.

அதன் பின்னர் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கௌதம் மேனனின் காதல் திரைப்பட பாணியை மேலும் வலுப்படுத்தியது.

‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘யுத்தம் செய்’ அல்ல; ‘நடுநிசி நாய்கள்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களின் மூலம் வெவ்வேறு களங்களை அவர் தொடர்ந்து முயற்சித்தார்.

குறிப்பாக ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித் குமாரை காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் முன்னிறுத்திய விதமும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் காதலையும் சாகசத்தையும் இணைத்த விதமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

சமீப ஆண்டுகளிலும் இயக்குநராக கௌதம் மேனனின் பயணம் தொடர்கிறது. 2022ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’, 2024ஆம் ஆண்டு வெளியான ‘ஜோஷுவா இமை போல் காக்க’ ஆகியவை அவரது பிந்தைய இயக்கப் படைப்புகளாக அமைந்துள்ளன.

தமிழ் சினிமாவில் காதல் மற்றும் திரில்லர் கதைகளை தனக்கே உரிய காட்சிமொழியுடன் உருவாக்கிய இயக்குநராக கௌதம் மேனனின் படைப்புகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset