நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது 

சென்னை: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிருத் இரவிசந்தர் இசையில் ஜெயிலர் 1 திரைப்படம் வெளியாகி வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. 

மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டு தேதியுடன் புதிய போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset