நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

சென்னை: 

இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இசை நிறுவனமான சரிகமா இந்தியா, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. 

நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறப்படும் பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் அவற்றின் மீது உரிமை கோரி வருவதாகவும் சரிகமா இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது 

தங்களுக்கு உரிமை உள்ள பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக இளையராஜாவுக்கு எதிராக ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது 

மேலும், சில பாடல்கள் ஸ்பாட்டிபை, யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது 

அதுமட்டுமல்லாமல் இளையராஜாவின் சொத்துகளை முடக்க வேண்டும் சரிகமா இந்தியா விடுத்த கோரிக்கை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset