செய்திகள் கலைகள்
உருமிமேளக் கலைஞர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது; நமது பாரம்பரிய கலைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: ஜெகன் - சிஆர் கார்த்திக்
அம்பாங்:
உருமி மேளக் கலைஞர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள செராஸ் வட்டாரத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நமது பாரம்பரிய கலைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும் என்று உள்ளூர் கலைஞர் ஜெகன், தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சிஆர் கார்த்திக் ஆகியோர் கூறினர்.
அம்பாங் வட்டாரத்தில் நமது இந்திய இளைஞர்கள் கடை வீதியில் உருமி மேளம் வாசித்து பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த காணொலியைப் பார்த்து கருத்து பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக உருமி மேளம் வாசிக்கும் கலைஞர்களுக்கு ஏன் தனியாக இடம் இல்லை என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் தான் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அஹ்மத் @ அல்டிமேட்டின் சிறப்பு அதிகாரி முஹம்மத் ஷஃபிக் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்.
குறிப்பாக உருமிமேளக் கலைஞர்களுக்கான இடப் பிரச்சினை குறித்து விசாரித்தார்.
அதே வேளையில் சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனையின் அடிப்படையில் என்னால் முடிந்த உதவியை வழங்குவதாக கூறினார்.
இன்று அவரை சந்தித்த போது செராஸ் வட்டாரத்தில் இரு மண்டபங்களை உருமிமேளக் கலைஞர்களுக்காக தயார் செய்துள்ளதாக முஹம்மத் ஷஃபிக் கூறினார்.
குறிப்பாக உருமிமேளம் உட்பட பாரம்பரியக் கலைகள் தொடர்பான பயிற்சிகள் இங்கு மேற்கொள்ளலாம்.
அதுவும் இலவசமாக மேற்கொள்ளலாம். யாருக்கும் தொந்தரவு இருக்காது என அவர் கூறியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.
குறிப்பாக நமது பாரம்பரியக் கலைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக நாங்கள் இதை பார்க்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
உருமிமேளம் என்பது நமது பாரம்பரியக் கலையாகும். ஆகையால் அக் கலையையும் கலைஞர்களையும் தவறாக பார்ப்பதை அனைவரும் நிறுத்த வேண்டும்.
அதற்கு இன்றைய நிகழ்வு ஓர் உதாரணமாகும் என ஜெகன், சிஆர் கார்த்திக் இருவரும் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 4:29 pm
