நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA- 25 YEARS OF GVM இசைநிகழ்ச்சி: எந்தெந்த பாடகர்கள் பங்கெடுக்கவிருக்கிறார்கள் ? 

கோலாலம்பூர்: 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA - 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி THE ARCH GALLERYஇல் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

இந்த இசைநிகழ்ச்சியானது முழுக்க முழுக்க இயக்குநர் கௌதம் மேனன் திரைப்படங்கள் சார்ந்த பாடல்கள் இடம்பெற்றிருக்கும். 

அவ்வகையில் ரசிகர்களை மகிழ்விக்க இந்த இசை நிகழ்ச்சிக்கு 10 முன்னணி பாடகர்கள் களம் காண்கின்றனர். 

BLAZE, PAAL DABBA, கிரிஷ், ஸ்ருதி ஹாசன், சைந்தவி, சத்யப்பிரகாஷ், ஹரிப்பிரியா ஆகியோர் ரசிகர்களுக்கு இசை விருந்தினை படைக்க ஆவலுடன் உள்ளனர். 

MY EVENTS INTERNATIONAL ,  RADAAN  MEDIA WORKS  நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். 

ONDRA RENDA -25 YEARS OF GVM இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது  ரசிகர்கள் டிக்கெட்டுக்களை வாங்க TICKET 2U.COM.MY எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset