நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்

நியூ ட்ரங்: 

டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா, ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை வென்றார். ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்தையும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

வியட்நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்கியது.  முதல்கட்டமாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்த கட்டமாக 12 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

அப்போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்டு’ உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்டினார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் இரண்டாவது இடம் பிடித்தார்.

மலேசியாவைச் சேர்ந்த தனுசியா செட்டி (25) மூன்றாம் இடத்தைப் பெற்றார். அவரது தாய்மொழி தமிழ் ஆகும். அவரது தந்தை வீரபாண்டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்டம் வென்று, மிஸ் வேர்ல்டு போட்டியில் நுழைந்தார்.

வியட்நாமில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு போட்டியின்போது ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரளமாக பேசினார். “மாற்றம் என்பது நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset