செய்திகள் விளையாட்டு
சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த 2034 உலகக் கிண்ண போட்டி 2035ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படலாம்
லண்டன்:
சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த 2034 உலகக் கிண்ண போட்டி 2035ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2034 உலகக் கிண்ண போட்டி, அனைத்துலக கால்பந்து சங்க வாரியத்திற்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
2022 கட்டார் பதிப்பைப் போலவே, கோடைக்காலத்தில் மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, இந்தப் போட்டியும் குளிர்காலத்திற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பொலிடிகோ அறிக்கை ஒன்று, அசாதாரணமான திட்டமிடல் சிக்கல்கள்' என விவரிக்கப்பட்ட பல முக்கிய திட்டமிடல் முரண்பாடுகளை வெளிப்படுத்தியது.
கட்டாரில் 2022 உலகக் கிண்ண போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது.
ஆனால் அந்தத் தேதி 2034-ஆம் ஆண்டு ரமலான் மாதத்துடன் அது முரண்படும்.
இஸ்லாமிய பிறை நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில், ரமலான் மாதம் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், உள்ளூர் பழக்கவழக்கங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டிகள் இரவில் நடத்தப்பட வேண்டியிருக்கலாம்.
இதனால் 2035ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
July 21, 2026, 9:26 am
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
