செய்திகள் விளையாட்டு
SORAK PIALA DUNIA 2026- FIFA உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் 50,000 பேர் வரை கலந்து கொண்டு இறுதியாட்டத்தைக் கண்டுகளித்தனர்
கோலாலம்பூர்:
2026 FIFA உலக கிண்ண போட்டியின் இறுதியாட்டம் கடந்த ஜூலை 19ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மலேசியாவில் FIFA உலக கிண்ண போட்டியின் கொண்டாட்டங்கள் மிகுதியாக காணப்பட்ட நிலையில் SORAK PIALA DUNIA 2026 நிகழ்ச்சியில் இறுதியாட்டத்தை மலேசியர்கள் அனைவரும் மிகப்பெரிய பிரம்மாண்ட திரையில் ஸ்பெயின் - அர்ஜெண்டினா ஆட்டத்தைக் கண்டு களித்தனர்.
தலைநகரில் உள்ள KL FESTIVAL PARK திறந்தவெளி மைதானத்தில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட காற்பந்து ரசிகர்கள் காற்பந்தாட்டத்தைக் கண்டு களித்தனர்.
ஸ்பெயின், அர்ஜெண்டினா இடையிலான இறுதி ஆட்டம் மலேசிய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடந்தது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆட்டத்தை ரசித்து பார்த்தனர்.
ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக் கொண்டு இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வாகை சூடியது.
SORAK PIALA DUNIA@KL FESTIVAL PARK எனும் FIFA உலகக் கிண்ண ரசிகர் திருவிழா ஜூலை 14 முதல் 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.
‘Biggest Screen, Biggest Roars!!!’ என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த உலகக்கிண்ண ரசிகர் விழாவில், 160 அடி × 40 அடி அளவிலான மிகப்பெரிய LED அகண்ட திரை அமைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், HotFM, FlyFM, KoolFM மற்றும் Eight WuXian ஆகிய வானொலி நிலையங்கள் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளர்களாக இணைந்துள்ளதுடன், Gardenia, TikTokShop, Sugarbomb, Ajmal Perfume, Kahf உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட உணவு, பான விற்பனையாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
July 21, 2026, 9:26 am
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
