செய்திகள் விளையாட்டு
காசெமிரோவின் இன்டர்மியாமி அணிக்கான இடமாற்றம் குறித்து எம்எல்எஸ் விசாரித்து வருகிறது
மியாமி:
இன்டர்மியாமி பிரேசில்நடுக்கள வீரர் காசெமிரோவை ஒரு இலவச வீரராக ஒப்பந்தம் செய்தது.
ஆனால், வீரர் பரிமாற்ற விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) விசாரணையால் இந்த நடவடிக்கை தற்போது முக்கியத்துவம் இழந்துள்ளது.
இன்டர் மியாமிக்கு எதிரான போலித் தகவல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாக எம்எல்எஸ் கூறியதுடன்,
விசாரணை முடியும் வரை காசெமிரோவின் உரிமைகள் தொடர்பாக அந்த கிளப்பிற்கும் எல்ஏ கேலக்ஸிக்கும் இடையில் எட்டப்பட்ட சமரசத்தின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.
முன்னாள் ரியல்மாட்ரிட், மென்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர், 2027 எம்எல்எஸ் சீசன் வரை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அதை ஜூன் 2029 வரை நீட்டிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் இன்டர்மியாமி உறுதிப்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:25 am
பிபா தலைவர் பதவி விலக வேண்டும்: டெபாஸ்
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
