செய்திகள் மலேசியா
நாடாளுமன்றத்தின் தவனைக் காலம் முடியும் வரை தேசிய முன்னணியின் ஒத்துழைப்பு தொடரும்: ஜாஹித்
ஜார்ஜ்டவுன்:
நாடாளுமன்றத்தின் தவனைக் காலம் முடியும் வரை தேசிய முன்னணியின் ஒத்துழைப்பு தொடரும்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.
பாங்காக் நகர்வு அல்லது துபாய் நகர்வு போன்ற எந்த அரசியல் இயக்கமும் இல்லை.
மேலும் 15வது நாடாளுமன்றக் காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பதில் தேசிய முன்னணி முழுமையாக உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு அச்சுறுத்தல்கள், பல்வேறு விளக்கங்கள் உள்ளன. அவர் என்னைச் சார்ந்திருக்கிறார். எனக்கு எந்த நோக்கமும் இல்லை.
பேங்காக் நடவடிக்கை என்ற ஒன்றோ, துபாய் நடவடிக்கை என்ற ஒன்றோ, எதுவுமே இல்லை.
முன்னாள் மாமன்னரின்வேண்டுகோளின் பேரில் நாங்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்க ஒப்புக்கொண்டபோது, நாடாளுமன்றத்தின் 15ஆவது தவனைக் காலம் முடியும் வரை நாங்கள் உறுதியளித்தோம். அவ்வளவுதான்.
இதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 10:52 pm
தேசிய துணை போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் ஓய்வு: வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வருகிறது
July 23, 2026, 3:32 pm
