செய்திகள் மலேசியா
ஸ்ரீ தஞ்ஜோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இளைஞரான எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்; சிறந்த சேவைகளை வழங்குவேன்: லெவினேஸ்வரன்
போர்ட்டிக்சன்:
ஸ்ரீ தஞ்ஜோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இளைஞரான எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
அவர்களுக்கு நிச்சயம் சிறந்த சேவைகளை வழங்குவேன் என்று அத்தொகுதியின் போட்டியிடும் பெர்சத்து வேட்பாளர் லெவினேஸ்வரன் கூறினார்.
நெகிரி செம்பிலான் தேர்தலில் ஸ்ரீ தஞ்ஜோங் தொகுதியில் பெர்சத்து கட்சியின் சார்பில் நான் போட்டியிடுகிறேன்.
எனக்கு வயது 25. நான் இந்த தொகுதியைச் சேர்ந்தவன். இங்கு தான் படித்தேன். இங்கு தான் தொழில் செய்து வருகிறேன்.
அதே வேளையில் அரசியலுக்கு வந்த பின் என் சொந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.
தற்போது தேர்தலிலும் போட்டியிடுகிறேன். என் தொகுதி மக்கள் நிச்சயம் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இத்தொகுதி மக்களுக்கு முழு நேரமும் சேவைகளை வழங்குவேன்.
இது தான் என்னுடைய முதன்மை வாக்குறுதியாகும்.
அதே வேளையில் ஸ்ரீ தஞ்ஜோங் தொகுதில் அடிப்படை வசதிகள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் என அனைத்திலும் கவனம் செலுத்துவேன்.
ஆக ஸ்ரீ தஞ்ஜோங் தொகுதி மக்கள் எனக்கு முழுமையாக ஆதரவை தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 10:55 pm
நாடாளுமன்றத்தின் தவனைக் காலம் முடியும் வரை தேசிய முன்னணியின் ஒத்துழைப்பு தொடரும்: ஜாஹித்
July 23, 2026, 10:52 pm
தேசிய துணை போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் ஓய்வு: வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வருகிறது
July 23, 2026, 3:32 pm
