நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய துணை போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் ஓய்வு: வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வருகிறது

கோலாலம்பூர்:

தேசிய போலிஸ்படையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு,  துணை போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சே, இந்த ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

போலிஸ் படையில் கிட்டத்தட்ட மூன்றரை தசாப்த கால சேவைக்குப் பிறகு, இந்த ஞாயிற்றுக்கிழமை தான் போலிஸ் சீருடையை அணியும் தனது கடைசி நாள்.

போலிஸ் துறையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்த ஞாயிற்றுக்கிழமைதான் படையில் எனது கடைசி நாளாக இருக்கும்.

பெண்டாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை: டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சேயின் நேர்மைப் பயணம் என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

கடந்த 2023 ஜூன் மாதம் போலிஸ்படை துணைத் தலைவராக  நியமிக்கப்படுவதற்கு முன்பு,

அயோப் கான் ஜொகூர் போலிஸ் தலைவர், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset