செய்திகள் மலேசியா
38 சதவீத மலேசியர்கள் 200 லீட்டர் எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை தாண்டி பயன்படுத்துகின்றனர்: பாதிக்கும் மேற்பட்டோர் கூடுதலாக பணம் செலுத்துகின்றனர்
கோலாலம்பூர்:
மலேசியர்களில் சுமார் 38 சதவீதம் பேர் 200 லிட்டர் எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை தாண்டி பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துகின்றனர்
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களின் கூடுதல் பணத்தை செலுத்தி எரிபொருளை நிரப்புகின்றனர்.
மலேசிய செலவு அழுத்தக் கணக்கெடுப்பு (MCPP) என அறியப்படும் கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது 49.5 சதவிகிதத்தினர், ஒவ்வொரு மாதமும் 200 லிட்டர் அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
45.9 சதவிகிதத்தினர் தங்களின் வழக்கமான வாகனம் ஓட்டுதல், எரிபொருள் பயன்பாட்டைத் தொடர, தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கூடுதலாகச் செலவிடுகிறோம் என்று கூறுகின்றனர்;
அதே நேரத்தில், 28.9 சதவிகிதத்தினர் மானிய வரம்பிற்குள் இருப்பதற்காகப் பயன்பாட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளனர்
மேலும் 8.9 சதவிகிதத்தினர், கூடுதல் எரிபொருள் செலவை ஈடுகட்ட, குடும்ப பட்ஜெட்டில் மற்ற செலவுகளைக் குறைப்போம் என்று கூறுகின்றனர்
ஜூலை 13 முதல் ஜூலை 14 வரை நடத்தப்பட்ட MCPP கணக்கெடுப்பு அதன் மூன்றாவது பதிப்பாகும்; இதற்கு முந்தைய இரண்டு பதிப்புகள் அல்லது மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டன.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 3:32 pm
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
July 23, 2026, 12:52 pm
பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு
July 23, 2026, 10:46 am
