செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்திடம் மருத்துவ விழிப்புணர்வு இல்லாதது வேதனையளிக்கிறது; மருத்துவ சேவை வேறு, அரசியல் வேறு: டாக்டர் சத்திய பிரகாஷ்
லிங்கி:
இந்திய சமுதாயத்திடம் மருத்துவ விழிப்புணர்வு இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
சிலாங்கூர் மாநில் கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் இதனை வலியுறுத்தினர்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஷ்குமார் ஆலோசனையில் அடிப்படையில் லிங்கியில் உள்ள இந்திய சமுதாயத்தை சந்தித்தோம்.
குறிப்பாக யானைக் கால் நோயால் பாதிக்கப்பட்ட இருவரை சந்தித்து அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த நோய்கள் அனைத்தும் ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சைகள் வழங்கினால் அதனை குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சம்பந்தப்பட்ட நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாதது தான் தற்போது அவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆக இவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.
இதனிடையே ஒரு மருத்துவர் என்ற முறையில் தான் இங்கு வந்துள்ளேன். இது என்னுடைய மருத்துவ சேவையாகும்.
இதையும் எனது அரசியல் பயணத்தையும் இணைக்க வேண்டாம். அரசியல் வேறு மருத்துவ சேவை வேறு என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 3:32 pm
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
July 23, 2026, 12:52 pm
பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு
July 23, 2026, 10:46 am
