நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி, சமூக நலன், வேலை வாய்ப்புகள் ஆகியவை இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான தூண்கள்: டத்தோஸ்ரீ அன்வார்

புத்ராஜெயா:

கல்வி, சமூக நலன், வேலை வாய்ப்புகள் ஆகியவை இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான தூண்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டமானது, தரமான கல்வி, விரிவான நலத்திட்டங்கள், திறன் மேம்பாடு, சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இன்று இந்திய சமூகத் தலைவர்களுடனான சந்திப்பில் இது வலியுறுத்தப்பட்டதாக அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

மித்ரா அது தொடர்பான அனைத்து துறைகளும் அடிமட்ட அளவில் மேலும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மித்ராவும் அது தொடர்பான அனைத்து துறைகளும் தொடர்ந்து களத்திற்குச் சென்று சமூகத்தை அணுகி, அங்குள்ள உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு முயற்சியும் உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்குப் பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தேசிய வளர்ச்சிப் பாதையில் எந்தவொரு குழுவும் விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதிசெய்ய, கருணை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை முக்கியமானது.

இந்த அணுகுமுறை, அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான நியாயமான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் என்றுபிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset