செய்திகள் மலேசியா
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
ஜொகூர் பாரு-
ஜொகூரில் அண்மையில் மூடப்பட்ட நெட்வொர்க் ஸ்கூல் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணையை அமலாக்க தரப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சி கேட்டுக்கொண்டது.
விசாரணைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட தரப்பு மீது நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்
உள்துறை அமைச்சு, தேசிய குடிநுழைவு துறை, போலிஸ், மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்து உரிய விசாரணைகளை செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபட்லி ஷாரி கூறினார்.
இரண்டாவது கடப்பிதழைத் தவறாக பயன்படுத்துதல், அடையாளத்தைத் தவறாக குறிப்பிடுதல், மலேசியாவிற்குள் நுழைவதற்கான விதிமுறைகளை மீறுதல் அல்லது தேசிய சட்டத்தின் கீழ் வரும் பிற குற்றங்கள் நிகழ்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
"ஒவ்வொரு அமலாக்க நடவடிக்கைக்கும் சட்டத்தின் ஆட்சியே எப்போதும் அடிப்படையாக இருக்க வேண்டும்," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி ஜொகூரில் உள்ள FOREST CITY பகுதியில் அமைந்துள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கையை நிறுத்த ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி உத்தரவு வெளியிட்டிருந்தார்.
ஆய்வு அறிக்கைகள் மற்றும் அமலாக்கக் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர், MBIP தொழில்நுட்ப சமூகத்திற்கு எதிராக ஒரு மூடல் உத்தரவைப் பிறப்பித்தது என்று ஓன் ஹாஃபிஸ் சொன்னார்
அந்நிய முதலீட்டாளர்கள் குறிப்பாக இஸ்ரேல் நாட்டு ஆடவர்கள் மலேசியாவிற்குள் நுழைய இரண்டாவது கடப்பிதழை பயன்படுத்தியதாக வெளியான செய்தி தொடர்பில் இந்த நெட்வொர்க் ஸ்கூல் நடவடிக்கை சர்ச்சையானது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 12:52 pm
பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு
July 23, 2026, 10:46 am
