செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இடையே புரிந்துணர்வு மட்டுமே உள்ளது; புதிய கூட்டணி எதுவும் இல்லை: ஹசான்
ரெம்பாவ்:
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இடையே தேர்தல் புரிந்துணர்வு மட்டுமே உள்ளது.
மாறாக புதிய கூட்டணி எதுவும் இல்லை என்று தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.
தேசிய முன்னணி ஒரு புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
அதே வேளையில் தேசியக் கூட்டணியுடன் உள்ள உறவானது, தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வதற்கான ஒரு புரிந்துணர்வு வடிவம் மட்டுமே.
இரு கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணியை உருவாக்காமல், தேர்தல்களை எதிர்கொள்வதில் இரு கூட்டணிகளுக்கு இடையே ஒரு பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறிவதே முக்கிய நோக்கமாகும்.
தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் அளவிற்கு மலாய் வாக்குகள் தொடர்ந்து பிரிக்கப்படுவதைத் தடுப்பதே இந்தக் கூட்டு முயற்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 10:55 pm
நாடாளுமன்றத்தின் தவனைக் காலம் முடியும் வரை தேசிய முன்னணியின் ஒத்துழைப்பு தொடரும்: ஜாஹித்
July 23, 2026, 10:52 pm
தேசிய துணை போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் ஓய்வு: வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வருகிறது
July 23, 2026, 3:32 pm
