செய்திகள் மலேசியா
மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் எதிர்நோக்கும் சேவை சிக்கலைக் களைய உடனடி நடவடிக்கை அவசியம்: ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் உத்தரவு
கோலாலம்பூர்-
மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் எதிர்நோக்கி வரும் சேவை சிக்கலைக் களைய உடனடி நடவடிக்கை அவசியம்
இதனை நாட்டின் அரசாங்க தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் வலியுறுத்தினார்.
நாட்டு மக்களின் சுகாதார விவகாரங்களே மடானி அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
PPUM என்பது மருத்துவ பயிற்சி வழங்கும் மருத்துவ சேவை மையம். அதன் சேவைகள் யாவும் ஒரு பயிற்சி மருத்துவமனையாக அதன் கொள்ளளவு மற்றும் திறன்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன.
மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீது உடனடி நடவடிக்கை அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் தலைமை செயலாளர், சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள், PPUM நிர்வாக குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 3:32 pm
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
July 23, 2026, 12:52 pm
பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு
July 23, 2026, 10:46 am
