செய்திகள் மலேசியா
‘IPOH’ மலை அடையாளப் பலகையில் சீன எழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் காட்டும் வைரல் புகைப்படம் உண்மையல்ல: ஈப்போ மாநகர் மன்றம் விளக்கம்
ஈப்போ-
IPOH மலை அடையாளப் பலகையில் சீன எழுத்துகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் புகைப்படம் உண்மையல்ல என்று ஈப்போ மாநகர் மன்றம் உறுதிப்படுத்தியது
அம்மாதிரியான புகைப்படம் சமூக ஊடகங்களில் உலா வரும் நிலையில் அது முற்றிலும் போலி என்றும் இலக்கவியல் முறையில் வடிவமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது
“Manjoi Manjoi Ajerr” எனும் புலனம் குழுவில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. ஆக, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு எடிட் செய்யப்பட்டுள்ளது என்று எம்.பி.ஐ தெளிவுப்படுத்தியது
புகழ்பெற்ற “IPOH” அடையாளப் பலகையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த ஜூலை 15 அன்று பிரிக்கப்பட்டது.
தற்போது அப்பணி ஆய்வு, பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
"பொதுமக்களிடையே பதற்றம், வெறுப்பு மற்றும் எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடிய தவறான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்துவதையும் ஈப்போ மாநகர் மன்றம் கடுமையாக கருதுவதாக மன்றம் தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 3:32 pm
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
July 23, 2026, 12:52 pm
பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு
July 23, 2026, 10:46 am
