நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் வெளியானது: மலேசியாவில் கோலாகல கொண்டாட்டம் 

கோலாலம்பூர்- 

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்களின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்று ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 

ஜனநாயகன் திரைப்படத்தின் கொண்டாட்டம் மலேசியாவிலும் எதிரொலித்தது. மலேசியாவிலும் இன்று ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. 

மலேசியாவில் இன்று காலை தொடங்கி நாட்டின் முன்னணி திரையரங்குகளில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு முதல் நாள் முதல் காட்சியை மகிழ்ச்சியோடு கண்டு களித்தனர். 

மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தை  MALIK STREAMS PRODUCTIONS AND DISTRIBUTION நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது. 

ஜனநாயகன் திரைப்படத்தின் FDFS கொண்டாட்டத்தில் MALIK STREAMS PRODUCTIONS & DISTRIBUTION நிறுவனத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான டத்தோ அப்துல் மாலிக் அவர்கள் கலந்து கொண்டார். 

காலை 6 மணி முதலே TSR SHAH ALAM திரையரங்கில் ஜனநாயகன் திருவிழா களைகட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஜனநாயகன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்கில் இந்த படத்தை கண்டு வருகின்றனர். 

ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் அவர்கள் இயக்கிய நிலையில் அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். 

ஜனநாயகன் படத்தில் நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர்கள் பூஜா ஹெக்டெ, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், ரேவதி, ஶ்ரீநாத், ஶ்ரீமான், ஆகியோர் நடித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset