நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது 

கோலாலம்பூர்- 

மலேசிய கால்பந்து லீக் 2026-2027 ஆம் ஆண்டு பருவத்திற்கான மலேசிய லீக் போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் மைதானத்தில் சுல்தான் அஹ்மத் ஷா கிண்ண தொடக்க ஆட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி JOHOR DT - KUCHING CITY அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறவுள்ளது. 

மொத்தம் 12 முன்னணி அணிகள் பங்கேற்கும் இந்த சூப்பர் லீக் போட்டித் தொடர், எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது மலேசியக் கிண்ணப் போட்டித் தொடர் 2027 ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி, மே 30-ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்

சர்வதேச FIFA நாட்காட்டி, ஆசிய அளவிலான போட்டிகள், நடுவர் தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் ரமலான் மாத அட்டவணை மாற்றங்கள் ஆகிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு இந்த முழுமையான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset