செய்திகள் விளையாட்டு
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
எஸெய்ஸா:
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.
2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போதிலும், இன்று அதிகாலையில் அர்ஜெண்டினா அணியின் வருகையை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எஸெய்ஸா அனைத்துலக விமான நிலையத்தில் திரண்டனர்.
தேசிய அணியை ஏற்றி வந்த விமானம் பியூனஸ் அயர்ஸில் தரையிறங்கியது.
அதன் பின் அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி, பெரும்பாலான வீரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், ராணுவ இசைக்குழுவின் நிகழ்ச்சியும் அளிக்கப்பட்டது.
இருப்பினும் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி விமானத்திலிருந்து இறங்குவதைக் காணமுடியவில்லை.
இது, அர்ஜெண்டினா கேப்டன் பிரதான அணியுடன் திரும்பவில்லை என்ற முந்தைய செய்திகளை உறுதி செய்தது.
அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் தலைமையகத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல், தேசியக் கொடிகளை அசைத்தபடி தங்கள் நாயகர்களை வரவேற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:26 am
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை தக்கவைக்கத் தவறியதால் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி
July 20, 2026, 10:04 am
உலகக் கிண்ணம் மெஸ்ஸியின் படை வீழ்ந்தது: ஸ்பெய்ன் சாம்பியன்
July 19, 2026, 10:41 am
மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்
July 19, 2026, 10:40 am
