நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்

நியூயார்க்:

பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில்  ஏற்பட்ட தோல்வியை மறப்பது தனக்குக் கடினமாக இருக்கும்.

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி இதனை கூறினார்.

23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. 

இதில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

இதனால் 64 ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் முதல் அணி என்ற அர்ஜெண்டினாவின் கனவை ஸ்பெயின் தகர்த்தது.

இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடனான தோல்விக்கு பின் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி அரங்கத்தில் உடைந்து அழுதார். 

இந்த நிலையில் மெஸ்ஸி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், இந்த வலி மிகவும் கடுமையானது; இந்தத் துயரத்தை மறப்பது எனக்குக் கடினமாக இருக்கும். 

ஆனாலும், இதில் உள்ள நல்ல விஷயங்களையும் நான் நினைவில் கொள்வேன். 

ஆட்டங்களின் மூலம் நாங்கள் அனைத்தையும் மாற்றியமைத்த விதம், ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவு, இந்த அணியின் கடின உழைப்பு ஆகியவை எங்களை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக உயர்த்தின.

இவை அனைத்தும் என்றென்றும் என் நினைவில் நிலைத்திருக்கும் என்று மெஸ்சி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset