செய்திகள் விளையாட்டு
FIFA உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்குப் பின் நிகழ்ந்த கைகலப்பு சம்பவம்: FIFA காற்பந்து சம்மேளனம் விசாரணை
வாஷிங்டன் -
FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் ஜூலை 19ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது
இந்த இறுதியாட்டத்திற்குப் பிறகு கைகலப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில் அது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது
அர்ஜெண்டினா மத்திய திடல் ஆட்டக்காரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் அணியின் எரிக் கார்சியா, காவி உள்ளிட்ட பல ஸ்பெயின் வீரர்களுடன் மோதியதால் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே ஒரு பெரிய கைகலப்பு ஏற்பட்டது.
அர்ஜெண்டினா அணியின் பயிற்றுநர் லியோனல் ஸ்கலொனி கைகலப்பை விலக்கியதுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து FIFA விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்காக கட்டொழுங்கு செயற்குழுவைத் தோற்றுவித்துள்ளது
FIFA உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டத்தில் ஸ்பெயின் அணி அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2010ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்பெயின் அணி 2026ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக FIFA உலகக் கிண்ணத்தை வென்று அசத்தியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
July 21, 2026, 9:26 am
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை தக்கவைக்கத் தவறியதால் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி
July 20, 2026, 10:04 am
உலகக் கிண்ணம் மெஸ்ஸியின் படை வீழ்ந்தது: ஸ்பெய்ன் சாம்பியன்
July 19, 2026, 10:41 am
மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்
July 19, 2026, 10:40 am
