நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் இரும்பு கொள்கலனில் தனிமைப்படுத்தப்படும் 2 கோடி மக்கள்

பெய்ஜிங்:

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது.  இதையடுத்து 'கொரோனா இல்லா சீனா' என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க லட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

கொரோனாதொற்றுப் பரவலின் ஆபத்தான மாறுபாடு ஓமிக்ரான் உலகில் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், இந்த மாறுபாட்டை தவிர்க்க சீனா தனது நாட்டில் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

அங்கு 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங்கைத் தவிர மற்ற நகரங்களில் ஓமிக்ரான் பதிப்பு 2 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு கண்டைனர்களால் உருவாக்கப்பட்ட  முகாம்கள்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

People in China forced to live in cramped metal boxes under draconian zero  Covid policy - watch | World News | Zee News

ஷிஜியாசுவாங் மாகாணத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்பு பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அன்யாங் உட்பட பல நகரங்களில்  2 கோடிக்கும் அதிகமான மக்களை அவர்கள் வீடுகளில் அடைத்து தனிமைப்படுத்தி சீன அரசாங்கம் வைத்துள்ளது.

சீனா இதுவரை மொத்தம் 2 கோடி மக்கள் அன்யாங் மற்றும் யூசோ நகரங்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset