செய்திகள் உலகம்
மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்
பாங்காக்:
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற தாய்லாந்து சரக்கு கப்பல் ஒன்று நேற்றும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 20 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
“மயூரி நரீ” எனப்படும் அந்தக் கப்பலிலிருந்து கருப்புப் புகை அடர்த்தியாக எழுவது போன்ற படங்களை தாய்லாந்து கடல்துறை, கடற்படை வெளியிட்டுள்ளன. கடலில் பல பாதுகாப்புக் கப்பல்கள் மிதந்ததும் காணப்பட்டது.
அந்தக் கப்பல் கலீபா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றபோது தாக்குதல் நடைபெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. தாக்குதலின் காரணங்களையும், விவரங்களையும் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓமான் கடற்படை 20 மாலுமிகளை மீட்டதாகவும், காணாமல் போன மூவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. ஈரான் அண்டை எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவதால், ஹார்முஸ் நீரிணையில் கடற்பயணம் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கப்பல் கண்காணிப்பு தகவலின்படி, 178 மீட்டர் நீளமும் சுமார் 30 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்தப் பொதிச் சரக்கு கப்பல் இந்தியாவின் கண்ட்லா துறைமுகம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது. இந்தக் கப்பல் தாய்லாந்தின் பிரெஷியஸ் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
ஈரானின் இணைய தாக்குதலுக்கு பலியான அமெரிக்கா: மருத்துவ நிறுவனத்தின் 50 டெராபைட் தரவுகள் திருட்டு
March 12, 2026, 1:11 pm
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
March 12, 2026, 11:04 am
“நான் முடிக்க சொன்னால் போர் முடியும்” – ஈரான் குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
March 11, 2026, 5:36 pm
