நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா ஏவுகணை தாக்குதலில் ஈரான் பள்ளியிலிருந்த நூற்றுக்கணக்கான சிறுமிகள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் டோமஹாக் ஏவுகணை தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி தாக்கப்பட்ட சம்பவம், இலக்கு இடத்தின் குறியீட்டை பழைய, புதுப்பிக்காத தரவின் அடிப்படையில் அமைத்ததே காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று நடந்த இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. ஆரம்ப தகவலின்படி, அமெரிக்கா ஈரானின் மினாப் நகரில் உள்ள ராணுவத் தளத்தைத் தாக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் பயன்படுத்தப்பட்ட இலக்கு தரவு புதுப்பிக்கப்படாத பழைய தகவலாக இருந்ததால் அந்த இடத்தில் இருந்த பள்ளி கட்டிடம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளி அமைந்திருந்த பகுதி முன்பு ஈரான் புரட்சிக் காவல் கடற்படையின் தளமாக இருந்ததாகவும், பின்னர் 2013 முதல் 2016 வரை அந்தப் பகுதி வேலியால் பிரிக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதலில் 165 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் குழந்தைகளும் அடங்குகின்றனர். எனினும் இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தச் சம்பவத்திற்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என கூறியிருந்தார். பின்னர் விசாரணை முடிவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தாலும், இந்த அறிக்கை குறித்து தமக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் பொறுப்பானவை என குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இஸ்ரேல் எந்தவித தொடர்பும் இல்லை என வழக்கம்போல் மறுத்துள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பள்ளிகளை நோக்கி திட்டமிட்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா விரும்பாது என்றும் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset