நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரை பதவி விலக சொல்வது ஏற்புடையது அல்ல; மஇகாவுக்கான வாக்கு இனப் போராட்டத்திற்கானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சிரம்பான்:

மஇகாவுக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்குகளும் இனப் போராட்டத்திற்கானது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.


நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்.

குறிப்பாக தேசிய முன்னணி சார்பில் சிரம்பான் ஜெயா மற்றும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் மஇகா போட்டியிடுகிறது.

கடந்த இரண்டு தேர்தலில் நாம் தோல்வி கண்டோம். இனியும் ஒரு தோல்வியை சந்திக்க கூடாது.

ஆகவே இந்த தேர்தலில் ம இகா வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.

மஇகா ஓர் இனத்தை பிரதிநிதிக்கும் கட்சியாகும். இக்கட்சிக்கும் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நமது இனப் போராட்டத்திற்கானது.

ஆகவே நெகிரி செம்பிலான் மாநில மக்கள் மஇகா, தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

KWAP நிதி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை பதவி விலக சொல்கின்றனர். இது மிகப் பெரிய தவறான விஷயமாகும்.

காரணம் குற்றம் நிரூபிக்கும் வரை யாரும் குற்றவாளிகள் இல்லை.

இதே வாய்ப்பை தான் அவர் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டிற்கு வழங்கினார்.

ஆக அவரை பதவி விலக சொல்வது ஏற்புடையது அல்ல என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்










தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset