செய்திகள் மலேசியா
நெகிரியில் மஇகா வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் மஇகா வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ தினாளன் ராஜகோபாலும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் அச்சுதனும் போட்டியிடுகிறார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் மஇகா வெற்றி பெற்றது.
இப்போது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.
ஜொகூர் மாநில தேர்தல் வேறு. நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வேறு.
நெகிரியில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கு பெருமை.
தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் வெற்றி பெற்று நாம் தோல்வி கண்டால் அது பெரும் பாதிப்பை கொண்டு வரும்.
ஆகவே இரண்டு தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்கும் படி அவர் மஇகா உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநில மஇகா மண்டபத்தில் மஇகா தலைவர்கள் முன்னிலையில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 5:59 pm
MYFutureJobs தளத்தில் 96,700 வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
July 22, 2026, 4:54 pm
வட சுமத்ராவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் உணரப்பட்டது
July 22, 2026, 3:00 pm
