நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: வேட்பாளர்களின் சமய போதனைக்கான அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் 

சிரம்பான்- 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சமய போதனை மற்றும் உரை நிகழ்த்துவதற்கான அனுமதியை நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறை தற்காலிகமாக இடைநிறுத்தியது 

இது தொடர்பான உத்தரவு ஜூலை 20 தேதியிட்ட கடிதம் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், வெள்ளிக்கிழமை தொழுகை சூராக்கள் மற்றும் சூராக்களின் பரிபாலனக் குழுத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி-பெர்த்துவான் பெசாரின் உத்தரவை மதித்து நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டின் கீழ் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் மற்றும் மூன்று அரசியல்வாதிகள் என மொத்தம் எட்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான் முஃப்தி துறை மூலம் புதிய அறிவிப்பு வெளியாகும் வரை, கடந்த ஜூலை 18 முதல் இந்த போதனை அனுமதி இடைநிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

புதிய அறிவிப்பு வரும் வரை இந்த இடைநிறுத்த உத்தரவை அனைத்து பள்ளிவாசல் மற்றும் சூராவ் நிர்வாகங்களும் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset