செய்திகள் மலேசியா
வட சுமத்ராவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் உணரப்பட்டது
கோலாலம்பூர்-
இந்தோனேசியா நாட்டின் வட சுமத்ரா பகுதியில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது கிள்ளான் பள்ளத்தாக்கிலும் உணரப்பட்டதாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
பெட்டாலிங் ஜெயா, காஜாங், பூச்சோங், கிள்ளான், செலாயாங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
கடந்த மார்ச் மாதம் இதே மாதிரி தான் சுமத்ராவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது இந்த நிலநடுக்கம் மேற்கு கரை சுமத்ரா பகுதியில் நிகழ்ந்தது.
2022 பிப்ரவரியில், வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்ததைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்காவில் உள்ள பல்வேறு உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, வட சுமத்ராவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியிருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 5:59 pm
MYFutureJobs தளத்தில் 96,700 வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
July 22, 2026, 3:00 pm
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம்
July 22, 2026, 11:51 am
