செய்திகள் உலகம்
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி; தாய்லாந்தில் 4,576 சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்; 617 பேர் கைது
பேங்காக்:
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த 4,576 கால்பந்துச் சூதாட்ட இணையத்தளங்களைத் தாய்லாந்துக் காவல்துறை முடக்கியுள்ளது. அத்துடன், 617 பந்தயப் பிடிப்பாளர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 20 பில்லியன் பாட்டிற்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தாய்லாந்து அரசக் காவல்துறையின் தகவல் தொழில்நுட்பக் குற்ற ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் தானா சுவோங் தெரிவித்துள்ளார்.
இணையவழி மோசடிகளுக்குப் போலி வங்கிக் கணக்குகள் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இதுபோன்ற போலி வங்கிக் கணக்குக் கட்டமைப்புகளை வேரோடு துடைத்தொழிக்கும் தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
