செய்திகள் உலகம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மக்கள் செயல் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் டாக்டர் ஃபைஷால்
சிங்கப்பூர்:
டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம், தம் மீது நம்பிக்கை வைத்திருந்த குடியிருப்பாளர்கள், ஆதரவாளர்களை ஏமாற்றிவிட்டதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அரசியல் பொறுப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மக்கள் செயல் கட்சி உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, அதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக மக்களுடன் இணைந்து பணியாற்றியதையும் அவர்களது குடும்பங்களைச் சந்தித்து கவலைகளைக் கேட்டறிந்து, சிறந்த சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
சமூகத்தை வலுப்படுத்தும் பணி தொடரும்; அது ஒருவர் சார்ந்ததல்ல என்றும் டாக்டர் பைஷால் தெரிவித்தார்.
மூத்த துணையமைச்சர் ஸாக்கி முஹம்மதும் (Zaqy Mohamad) அவரது குழுவினரும் அந்தப் பணியை அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் தொடர்வார்கள் எனத் தாம் உறுதியாக நம்புவதாக அவர் கூறினார்.
மரீன் பரேட்–பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெம்பாங்கான் தொகுதி மக்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
தமக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் பைஷால் இனி தமது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடினமான இந்தக் காலக்கட்டத்தில் உறுதுணையாக இருந்த தனது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
