செய்திகள் உலகம்
குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய 19 பேருக்குச் சிறை: இந்தோனேசிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஜகார்தா:
குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய 19 பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் ஆண், எஞ்சிய 18 பேரும் பெண்கள்.
இந்தோனேசியாவின் பண்டுங் (Bandung) நகரில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அவர்கள் சுமார் 34 குழந்தைகளைக் கடத்தி, சிங்கப்பூர்த் தம்பதிகளுக்கும் இந்தோனேசியத் தம்பதிகளுக்கும் விற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது.
19 பேரும் 2022ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளைக் கடத்தி ஒவ்வொரு குழந்தையையும் ஆயிரக்கணக்கான வெள்ளிக்கு விற்றனர்.

கடத்தல் கும்பலின் தலைவர் 70 வயது லில்லிக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடத்தலுக்குக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க உதவிய 26 வயது அஸ்திரி ஃபிட்ரினிக்காவுக்கு (Astri Fitrinika) ஆறாண்டுச் சிறைத்தண்டனை.
35 வயது ஜாக்கா ஹம்தானிக்கு (Djaka Hamdani) ஏழாண்டுச் சிறை.
அந்த இருவருக்கும் உதவிய எலின் மார்லினாவுக்கு (Elin Marlina) 6 ஆண்டு, 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குழந்தைகளுக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்த 60 வயது லாய் சியூ ஹாவுக்கும் (Lai Siu Ha) 6 ஆண்டு, 7 மாதச் சிறை.
எஞ்சிய 15 பேருக்கு மூன்றாண்டு, 4 மாதச் சிறை விதிக்கப்பட்டது.
லில்லி, அஸ்திரி, ஜாக்கா, லாய், எலின் ஆகியோருக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னதாக 10 ஆண்டுச் சிறைத்தண்டனை கோரியிருந்தனர்.
மற்ற 14 குற்றவாளிகளுக்கும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னதாக ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
