செய்திகள் உலகம்
பிரிட்டனின் புதிய பிரதமராக பா்ன்ஹாம் ஆட்சியமைக்க பக்கிம்ஹாம் அரண்மனையில இருந்து அரசா் சாா்லஸ் அழைப்பு
லண்டன்:
பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பா்ன்ஹாம் (56) திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, தலைநகா் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ ‘10, டவுனிங் ஸ்டீரிட்’ இல்லத்தில் ஆண்டி பா்ன்ஹாம் முதல்முறையாக உரையாற்றினாா்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனின் 7-ஆவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவா், பாரம்பரியமாக பிரதமா்கள் பயன்படுத்தும் மேடையைத் தவிா்த்துவிட்டு நாட்டு மக்களிடம் நேரடியாக ஆற்றிய உரை வருமாறு:
2016-க்குப் பிறகு இப் பொறுப்புக்கு வரும் 7-ஆவது நபா் நான். பிரிட்டன் தனது நிலைத்தன்மையை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் நிலைத்தன்மையை உருவாக்குவதே எனது முக்கிய இலக்கு.
1980-களில் அரசியல் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டன, பொருளாதாரம் தனியாா்மயமாக்கப்பட்டது. இதனால் விளைந்த பாதிப்புகள் இன்னும் சரிசெய்யப்பட்டவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய மாற்றங்களைச் செய்து, பிரிட்டனுக்கான புதிய அரசியல் மற்றும் பொருளாதார மாதிரியை உருவாக்குவேன்.
குறைகூறும் அரசியலைக் கைவிட்டு, பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் அரசியலை முன்னெடுக்கப் போகிறேன். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் சாலையோரங்களில் மக்கள் உறங்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதே எனது முதல் பணி. தோல்விகளுக்காகச் செலவிடுவதை விட, மக்களின் முன்னேற்றத்துக்காக முதலீடு செய்யும் அரசாக எனது அரசு செயல்படும் என்றாா்.
முந்தைய பிரிட்டன் பிரதமரான கியா் ஸ்டாா்மா், அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தாா். இதையடுத்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்க, ஆளுங்கட்சியின் தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் கடந்த வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வானாா்.
இந்நிலையில், கியா் ஸ்டாா்மா் தனது பிரதமா் பதவியை திங்கள்கிழமை முறைப்படி ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ஆண்டி பா்ன்ஹாம் ஆட்சியமைக்க பக்கிம்ஹாம் அரண்மனையில இருந்து அரசா் சாா்லஸ் அழைப்பு விடுத்தாா்.
ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவா் ஆண்டி பா்ன்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
