செய்திகள் உலகம்
பிரிட்டன் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளிகள்
லண்டன்:
பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஆண்டி பா்ன்ஹாம் தலைமையிலான அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 36 வயதான கனிஷ்க நாராயணன் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதேநேரம், மற்றொரு இந்திய வம்சாவளியான லிசா நேண்டி கலாசாரம், ஊடகம், விளையாட்டுத் துறையின் பொறுப்புகளுடன் எண்ம சேவைகள் துறையின் அமைச்சராகக் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளாா்.
பிஹாரில் பிறந்த கனிஷ்க நாராயணன், தனது 12-ஆவது வயதில் வேல்ஸில் குடும்பத்துடன் குடியேறியனாா். ஆக்ஸ்போா்டு, ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயின்ற இவா், 2024 பொதுத்தோ்தலில் வேல்ஸ் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் சிறுபான்மையின எம்.பி. என்ற பெருமையைப் பெற்றவா்.
இதேபோல், தெற்காசிய பின்னணியைக் கொண்ட ஷபானா மஹ்மூத் தொடா்ந்து உள்துறை அமைச்சராக நீடிக்கிறாா். இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்த ஜோனாதன் ரெனால்ட்ஸ் மீண்டும் வா்த்தகம், அறிவியல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
