செய்திகள் உலகம்
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 விழுக்காடு அமெரிக்கா புதிய வரி விதிப்பு: அமெரிக்கா அதிபர் டிரம்ப் கையெழுத்து
வாஷிங்டன்:
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 விழுக்காடு புதிய சுங்கவரியை விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்
கனடா நாட்டு அரசாங்கம் அமெரிக்காவின் மதுபானங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு எதிராக பாகுபாடான அணுகுமுறையை கொண்டிருந்த நிலையில் அதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய சுங்கவரி அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அமலுக்கு வரும். இதில் மதுபானங்கள், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட பலதரப்பட்ட நுகர்வோர் பொருட்கள் அடங்கும்.
இதுவரை பரிசோதிக்கப்படாத 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் பிரிவு 338-ஐ பயன்படுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கும் அமெரிக்கப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்புகளுக்கும் அந்நாட்டைப் பொறுப்பேற்கச் செய்வதே இந்த அறிவிப்பின் முதன்மை நோக்கம் என்று அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
