செய்திகள் உலகம்
இலங்கையில் தீவிரமடையும் டெங்கி காய்ச்சல்: பரவலைக் கட்டுப்படுத்த ஆயுதப் படைகள் களம் இறக்கம்
கொழும்பு-
இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கி காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது.
இதனால் அந்நாட்டின் பொது சுகாதாரச் சேவைகளும் மருத்துவமனைகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆயுதப் படைகளின் உதவியை நாடியுள்ளது.
பருவமழைக்குப் பிறகு வீடுகளின் கூரைகளில் தேங்கியிருக்கும் நீரைக் கண்டறிய விமானப் படையின் ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை ஒழிக்கும் நோக்கில், இராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் வீடுகள், கட்டுமான மையங்கள் மற்றும் பள்ளிகளில் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 76,044 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீரியமிக்க புதிய ரக வைரஸ் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இது, கடந்த 2017-ஆம் ஆண்டு 1,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நிகரான சூழலை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், டெங்கி தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இருப்பினும், டெங்கி வைரஸ் மிகவும் சிக்கலானது என்பதாலும், பல திரிபுகள் ஒரே நேரத்தில் பரவுவதாலும், தடுப்பூசியால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
