செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 200,000 வெள்ளி மதிப்புடைய வைரத்தைத் திருடிய இரு இந்திய நாட்டவர் கையும் களவுமாக பிடிபட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சைனாடவுன் கடையிலிருந்து 200,000 வெள்ளி மதிப்புடைய வைரத்தைத் திருடிய ஆடவர் ஒருவருக்கு ஈராண்டு இரண்டரை மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
41 வயது மாங்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய்யும் 30 வயது செரசியா மிலன் ராம்நிக்பாய்யும் இணைந்து குற்றத்தைப் புரிந்தனர்.
அவர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
திருட்டை மேற்கொள்ளத் திட்டமிட்டே அவர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் செய்தனர்.
அதற்கு முன்னர் இருவரும் குஜராத் மாநிலத்தின் சூரத் (Surat) நகரிலிலிருந்து போலி வைரத்தை வாங்கினர்.
சைனாடவுன் நகைக்கடைக்குச் சென்ற அவர்கள் உண்மையான வைரத்தைத் திருடி அதற்குப் பதிலாகப் போலி வைரத்தைக் கடையில் வைத்தனர்.
இவ்வாண்டு ஜூன் 19ஆம் தேதி இருவரும் சிங்கப்பூருக்கு வந்தனர்.
அதே நாள் பிற்பகல் 3 மணிக்கு இருவரும் கடைக்குச் சென்றனர்.
திட்டமிட்டபடி அவர்கள் திருட்டைப் புரிந்தனர்.
அவர்களுடைய செயல் கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
அதே நாள் இரவு அவர்கள் இந்தியாவுக்குச் செல்லவிருந்தனர்.
அன்றிரவு சுமார் 8.50 மணிக்கு இருவரும் சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அந்த இரு இந்தியர்களும் இத்தகைய திருட்டுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
