நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும்: உலக வங்கி

புது டெல்லி:

இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீட்சி பெறாததால், ஏற்கெனவே கணித்தபடி, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

இந்தியாவின் புள்ளியியல் அலுலகம், தேசிய வருவாய் கிடைத்த விவரங்களை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், உற்பத்தி, சுரங்கம், வேளாண்மை ஆகிய துறைகள் கரோனாவுக்குப் பிறகு மீண்டுள்ளதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கடந்த ஜூன் மாதம் கணித்திருந்தது.

அதன் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீட்சி பெறவில்லை என்பதால் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பில் எந்தவித மாற்றம் இருக்காது. அது, 8.3 சதவீதமாகவே இருக்கும் என்று உலக வங்கி  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset