செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு அன்வாருக்கு ஜாஹித் விடுத்த சவால் பொருத்தமற்றது: அமினுடின்
லிங்கி:
துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, தன்னையும் மற்ற தேசிய முன்னணி அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சவால் விடுப்பது பொருத்தமற்றது.
நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் கூறினார்.
தேசிய முன்னணி தலைவரின் அறிக்கை பிரதமரின் அதிகாரத்திற்கு சவால் விடுப்பது போல் தெரிகிறது.
அது உண்மையாக இருந்தால், அது ஒரு சவால் என்றே நான் கருதுகிறேன்.
பிரதமரின் நண்பருமான அவரின் அந்தக் கூற்று பொருத்தமற்றது என்று நான் நினைக்கிறேன் என்று லிங்கியில் பிரச்சாரம் செய்தபோது அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, மத்திய அரசாங்கத்தில் உள்ள சக ஊழியர்களைத் தாக்குவதற்கு எந்தவொரு அமைச்சர், துணை அமைச்சர், அரசாங்க நிறுவனங்களில் உள்ள அலுவலகப் பொறுப்பாளர்களும் தங்கள் பதவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
