செய்திகள் மலேசியா
துறைமுக செயல்பாட்டு நிறுவனங்களை வழிநடத்த வெளிநாட்டு நிர்வாகிகளின் நியமனம்; மலேசியாவின் மதிப்பை மேலும் கூட்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
மலேசியாவில் உள்ள துறைமுகச் செயல்பாட்டு நிறுவனங்களை வழிநடத்த வெளிநாட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளது.
இது அவர்களின் திறன்கள், உள்ளூர் தலைவர்களை உருவாக்கும் தெளிவான வாரிசுரிமைத் திட்டங்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
உலகளாவிய கடல்சார் துறையில் சர்வதேசத் திறமையாளர்களைப் பணியமர்த்துவது ஒரு பொதுவான நடைமுறை.
இதற்கு குறிப்பிட்ட நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்றும் கடல்சார் தொழில் வல்லுநரான டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் கூறினார்.
இருப்பினும், துறைமுகங்கள் வெறும் வணிக நிறுவனங்கள் மட்டுமல்ல.
அவை வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் போட்டித்திறனை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய உள்கட்டமைப்புகளாகும்.
இது தொடர்பாக, வெளிநாட்டினரின் நியமனம் வலுவான நிர்வாகம், இயக்குநர்கள் குழுவில் மலேசியர்களின் பங்கேற்பு, சொத்துக்கள் தொடர்பான முடிவுகளில் தெளிவான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அனைத்துலக நடைமுறைகள் மட்டுமே மலேசியாவின் அணுகுமுறையைத் தீர்மானிக்கக் கூடாது.
வெளிநாட்டிலிருந்து வேட்பாளர்களைப் பரிசீலிப்பதற்கு முன்பு, உண்மையிலேயே தகுதியான மலேசியர்கள் இருக்கிறார்களா என்பதே கேட்க வேண்டிய முதல் கேள்வி என்று மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் லைமை நிர்வாக அதிகாரியுமான அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
வெளிநாட்டு நிர்வாகிகள் நிபுணத்துவம், சர்வதேச தொடர்புகள், துறைமுக நிர்வாகத்திற்கான ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்தால், அவர்களின் நியமனம் நன்மை பயக்கும்.
முனைய தானியக்கம், இலக்கவியல்மாக்கும் விரைவுபடுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அதிக கப்பல் நிறுவனங்களை ஈர்க்கவும், உலகளாவிய வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் அவர்களுக்கு ஆற்றல் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
