செய்திகள் மலேசியா
பத்து காஜா வட்டாரத்தில் ஐந்து ஆலயப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு; நான்கு ஆலயங்கள் இடமாற்றத்திற்கு ஒப்புதல்: டத்தோ சிவநேசன்
பத்துகாஜா:
பத்துகாஜா வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஐந்து இந்து ஆலயப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இவ்வாலயங்கள் அரசாங்கம் ஒதுக்கியுள்ள பூசிங், பாப்பான் எனும் இடத்தில் உள்ள பிரதான சாலையோரத்தில் 3 ஏக்கர் நிலத்தில் இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கு நான்கு ஆலய நிர்வாகங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அரசு நில அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆலய நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்கள் வழிபாடு நடத்தி வரும் இடங்களின் சட்டநிலை ஆய்வு செய்யப்பட்டது.
சில ஆலயங்கள் அரசுக்குச் சொந்தமான நிலங்களிலும், சில சுகாதாரத் துறைக்குச் சொந்தமான நிலங்களிலும், சில நகராண்மைக் கழக நிலங்களிலும், மேலும் ஒரு ஆலயம் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்திலும் அமைந்துள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக, ஐந்து ஆலயங்களையும் ஒரே வளாகத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள புதிய நிலத்திற்கு மாற்றி, ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனித்தனி நிலப்பகுதியுடன் பட்டா வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இடமாற்றத் திட்டத்தில் தேவகாளி பைரவர் ஆலயம், ஸ்ரீ மாகாளியம்மன் ஆலயம், பேச்சியாயி அம்மன் ஆலயம், ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆகிய ஐந்து ஆலயங்கள் இடம்பெற்றுள்ளன.
நில ஒதுக்கீட்டின் அடிப்படையில், கோவில் தேவகாளி பைரவருக்கு சுமார் 12,000 சதுர அடி நிலமும், கோவில் ஸ்ரீ மாகாளியம்மனுக்கு சுமார் 11,000 சதுர அடி நிலமும் வழங்கப்படவுள்ளது.
மற்ற மூன்று சிறிய ஆலயங்களுக்கு தலா 2,500 முதல் 3,500 சதுர அடி வரை நிலம் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
