செய்திகள் மலேசியா
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
சிரம்பான்:
பிரதமருக்குப் பிடிக்கவில்லை என்றால், என்னையும் தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களையும் அவர் பதவியிலிருந்து நீக்கலாம்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசாங்கத்தில் உள்ள சக உறுப்பினர்களைத் தாக்கியவர்கள் பதவி விலக வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் எட்டு அமைச்சர்களில் எவரும் ராஜினாமா செய்ய எந்தக் காரணமும் இல்லை.
தேசிய முன்னணியைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் முழு அமைச்சர்களாகவும், ஏழு பேர் துணை அமைச்சர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நாங்கள் சிறந்த நிர்வாக அனுபவம் கொண்ட கட்சி என்பதற்கு இதுவே சான்று.
அதனால்தான் நாங்கள் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம்.
நாங்கள் மற்ற அமைச்சகங்களையோ, மற்ற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களையோ குறிப்பிடுவதே இல்லை.
எங்களை மட்டுமே குறிப்பிடுகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
